டென்னிஸ் தொடரில் எம்.எஸ்.தோனி: வைரலாகும் வீடியோக்களால் ரசிகர்கள் அதிர்ச்சி!

டென்னிஸ் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி களம் இறங்கி இருக்கிறார்.

Update: 2022-11-25 03:15 GMT

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட பொழுதும் தோனி மீது இருந்த அதை காதல் இன்னும் ரசிகர்களிடமிருந்து குறையவே இல்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி டென்னிஸ் தொடரில் களமிறங்கியுள்ள வீடியோக்கள் தற்பொழுது இணையதளத்தில் வாயிலாகி வருகிறது. இவரை இணையதளத்தில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் இருக்கிறது.


தோனி என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஐ.பி.எல் தொடருக்காக ஏதாவது செய்து வருவாரா? அடுத்து என்ன செய்யப் போகின்றார்? என்று பலத்தை எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் தோனியும் அவ்வப்பொழுது பொது நிகழ்ச்சிக்கு செல்வது, இந்திய அணி குறித்து பேசுவதும், சி.எஸ்.கே தொடர்பான அப்டேட்கள் கொடுப்பது போன்ற செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் கூட புதிதாக வந்துள்ள கியா மின்சார காரை வாங்கி ரஞ்சியில் வலம் வந்த வீடியோ சமூகத்தில் வைரல் ஆனது.


இந்நிலையில் டென்னிஸ் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரல் ஆகியது. குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தின் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆடவர் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எம்.எஸ். தோனி உள்ளூர் டென்னிஸ் வீரர் சுமித் என்பவரிடம் ஜோடி சேர்ந்து இரட்டை இரு பிரிவில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். 41 வயதிலும் பிட்னஸ்க்கு குறைய வைக்காது தோனியின் உடல் கட்டுப்பாட்டை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என தெரிய வருகிறது. இம்முறை ஹோம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப் பட்டதால் சென்னையிலேயே ஓய்வு பெறலாம். இதன் பின்னர் இந்திய டி20 அணியின் இயக்குனராக பதவி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News