ஆறாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.!
ஆறாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.!
ஐபிஎல் 2020 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப்ஸ் சுற்று போட்டிகள் ஆரம்பம் ஆகி உள்ளது. இந்நிலையில் பிளே ஆப்ஸ் சுற்றி முதல் போட்டியான குவாலிபையர் 1 போட்டி திட்டமிட்ட படி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. புள்ளி பட்டியிலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா வழக்கம் போல் டக் அவுட் ஆகி வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த டிகாக் மற்றும் சூரியக்குமார் யாதவ் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிபடுத்த மும்பை அணி விறுவிறவேன ரன்களை குவித்தது. 10 ஓவர்களுக்கு பிறகு அஸ்வினின் சுழலில் சிக்கியது மும்பை அணி. டி காக் 40 ரன்னிலும் சூரியக்குமார் 51 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த பெல்லார்ட் டக்அவுட் ஆக மும்பை திணறும் நிலைக்கு சென்ற நிலையில் கடைசி ஐந்து ஓவரில் ஹர்டிக் பாண்டியா மற்றும் இஷன் கிஷனின் அதிரடி ஆட்டத்தில் டெல்லி கதிகளங்கியது. டெல்லி அணிக்கு 200 டார்கெட் வைத்தது மும்பை அணி.
பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ப்ரித்திவ் ஷா , தவண், ரஹானே மூவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆக 0 ரன்னில் மூன்று விக்கெட்டை இழந்தது டெல்லி அணி. பின்னர் வந்த ஷ்ரேயஸ் ஐயர் 12 ரன்னில் வெளியேற ஸ்டோனிஸ் மட்டும் 65 ரன்கள் அடித்தார். அக்ஷர் படேல் 42 ரன்கள் அடிக்க 53 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.