ரோஹித் சர்மா தலைமையில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.!

ரோஹித் சர்மா தலைமையில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.!

Update: 2020-11-11 08:54 GMT

ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டி  துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றதுஇறுதி போட்டிக்கு முன்னேறிய மும்பை இன்டியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆகிய இரு அணிகளும் மோதின. மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பை வெல்லவும் டெல்லி அணி முதல் முறையாக கோப்பை வெல்லும் நோக்கி விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய டெல்லி அணியில் ஸ்டோனிஸ் டக் அவுட் ஆக பின்னர் வந்த ரஹானே 2 ரன்னில் அவுட் ஆக தவண் 15 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் நிலைத்து விளையாடினர்.

இருவரும் அரைசதம் வீளாச பண்ட் 56 ரன்கள் அடித்து அவுட் ஆக ஷ்ரேயஸ் ஐயர் கடைசி வரை அவுட் ஆகாமல் 65 ரன்கள் சேர்க்க டெல்லி அணி 156  ரன்கள் சேர்த்தது.

பின்னர் களம் இறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் அதிரடி காட்ட டி காக் 20 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த சூரியக்குமார் யாதவ் 19 ரன்கள் அடிக்க ரோஹித் சர்மா நிலைத்து விளையாட அரைசதம் வீளாச இஷன் கிஷன் 33 ரன்கள் அடிக்க மும்பை அணி எளிதில் வெற்றி பெற்று தனது ஐந்தாவது கோப்பை வென்றது

Similar News