முதல் டி-20 போட்டியிலேயே மூன்று விக்கெட்களை வீழத்தி அசத்திய தமிழகத்தை சேர்ந்த நடராஜன்.!
முதல் டி-20 போட்டியிலேயே மூன்று விக்கெட்களை வீழத்தி அசத்திய தமிழகத்தை சேர்ந்த நடராஜன்.!
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான முதல் டி.20 போட்இன்நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிஆர்கி ஷாட் 34 ரன்களும், ஆரோன் பின்ச் 35 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், பின்வரிசையில் களமிறங்கிய ஹென்ரிக்ஸை (30) தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.
இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் டி-20 போட்டியில் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய நிலையில் முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்கள் வீழத்தி அசத்தினார். முதல் ஒவரில் விக்கெட் எடுக்காத நடராஜன் இரண்டாவது ஒவரில் மேக்ஸ்வேல் விக்கெட்டை வீழத்தி அசத்தினார். ஸ்டார்க் யார்க் போட்டு விக்கெட் வீழ்த்த வெற்றி முக்கிய பங்கு வகித்தார் நடராஜன்.