"ஸ்டார்க் வீசிய பந்து கண்ணுக்கே தெரியவில்லை" - அஸ்வின் கேட்ட கேள்விக்கு நடராஜனின் பதில்!
"ஸ்டார்க் வீசிய பந்து கண்ணுக்கே தெரியவில்லை" - அஸ்வின் கேட்ட கேள்விக்கு நடராஜனின் பதில்!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் மூன்று வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக இடம்பிடித்த நடராஜன் டி20 போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி அடைந்த காயம் காரணமாகவும், ஒருநாள் போட்டிகளில் நவ்தீப் சைனி அடைந்த காயம் காரணமாகவும் இந்திய அணிக்காக அறிமுகமாகி அசத்தினார்.
இந்த இரண்டு வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜன் 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிறப்பான துவக்கத்தை அளித்தது மட்டுமின்றி தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் 3வது போட்டியில் அடைந்த காயம் காரணமாக இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கும் அஸ்வின் நேற்று தொகுப்பாளராக மாறி இந்திய அணியின் வீரர்களான சுந்தர், நடராஜன், ஷர்துல் தாகூர் ஆகியோரை பேட்டி கண்டார்.
அந்த பேட்டியில் நடராஜனிடம் அஸ்வின் நெட் பவுலராக இருந்த நீங்கள் இப்போது நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளீர்கள் இந்த அனுபவம் எப்படி உள்ளது என்று கேட்டார்.
அதற்கு தமிழிலேயே பதிலளித்த நடராஜன் :ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என்று நான் எதிர்பார்க்கல.
நெட் பவுலரா இருந்து முடித்து விட்டு செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமா எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று நடராஜன் தமிழிலேயே தனது பதிலை அளித்தார்.
அதன் பின்னர் அஸ்வின் கேட்ட மற்றொரு கேள்வி ஸ்டார்க் பந்து வீீச்சில் நீ சிறப்பாக விளையாடினாய் என்றதும் நடராாஜன் ஸ்டார்க் வீசிய முதல் பந்து கண்ணுக்கே தெரியவில்லை என்றார். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பி.சி.சி.ஐ சேனலுக்கு அஷ்வின் தொகுத்து வழங்கினார்.