அடுத்த கேப்டன் இவரா.. இந்திய அணியில் ஏற்பட போகும் மிகப்பெரிய மாற்றம்..

இந்திய அணியின் புதிய கேப்டன் நியமிக்கப்படுவாரா?

Update: 2023-06-15 05:33 GMT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விராட் கோலி தலைமையே இதற்கு பரவாயில்லை என்றும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தடுமாறி வருவதாகவும் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். ஒரு அணி ஜெயித்து விட்டால் எப்படி தலைவரை கொண்டாடுகிறோமோ அதே போல அந்த அணி தோற்று விட்டாலும் அதே தலைவரை தான் குற்றம் சொல்கிறோம் காரணம் தலைவர் எப்படி பல்வேறு சூழ்நிலைகளை சமாளித்து ஆட்டத்தை வெற்றி பெற வைக்கிறார் என்பதை பொறுத்துதான் அமையும்.


அந்த வகையில் ரோகித் சர்மாவிற்கு இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் புதிய கேப்டன் யார் என்பது குறித்த மும்மரமான தேடுதலில் இந்திய கிரிக்கெட் வாரியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரே பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பந்த் தான். குறிப்பாக இவர் இந்தியாவிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் தன்னுடைய முழுமையான முயற்சிகளை கொடுத்து இருக்கிறார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற வைத்தது இவருடைய முக்கிய சாதனையாக அமைந்திருக்கிறது. எனவே இவருக்கான வாய்ப்பு தற்போது அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News