வலுவான படையுடன் வெஸ்ட் இண்டிஸ் அணியை டெஸ்டில் எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி.!
வலுவான படையுடன் வெஸ்ட் இண்டிஸ் அணியை டெஸ்டில் எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி.!
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது வெஸ்ட் இண்டிஸ் அணி. இந்த தொடர் நவம்பர் மாதம் 27ம் தேதி தொடங்க உள்ளது.
கொரோனா தொற்றிற்கு பிறகு நியூசிலாந்து அணி விளையாட உள்ள முதல் தொடர் இதுவாகும். வெஸ்ட் இண்டிஸ் அணி இதற்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு சுற்றுபயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மண்ணிலேயே இங்கிலாந்து அணியை திணற செய்தது வெஸ்ட் இண்டிஸ் அணி. இங்கிலாந்து அணி தொடரை வென்றாலும் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஆட்டம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டிஸ் அணி அதே வேகத்தில் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. நியூசிலாந்து அணி தனது டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. வில்லியம்சன், போல்ட், வாக்னெர் போன்ற முன்னனி வீரர்களை கொண்டு களம் இறங்குகிறது.
டெஸ்ட் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமீசன், டாம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ரோஸ் டெய்லர், நீல் வாக்னர், பிஜே வாட்லிங் (வார), வில் யங்