ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 தொடரில் புதிய ஜெர்சியில் களம் இறங்கும் நியூசிலாந்து அணி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி-20 தொடரில் புதிய ஜெர்சியில் களம் இறங்கும் நியூசிலாந்து அணி!
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே நியூசிலாந்து நாட்டிற்கு சென்று அணி வீரர்கள் தங்களை தனிமைபடுத்தப்பட்டு பின்னர் தீவிர பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டனர். கொரோனா தொற்றுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி இந்தியா அணியுடன் மூன்று விதமான தொடரில் பங்கேற்று விளையாடியது.
அதை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்து நிலையில் கொரோனா அச்சுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா அணி அந்த தொடரை கைவிட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் விளையாட உள்ளது.
நியூசிலாந்து அணி கொரோனா தொற்றுக்கு பிறகு வெஸ்ட் இண்டிஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இரண்டு தொடர்களை விளையாடி உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டி-20 தொடர் பெரிய எதிர்பார்ப்பு இடையில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்கெட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிறது.
இந்த தொடரில் நியூசிலாந்து அணி புதிய ஜெர்சியில் விளையாட உள்ளது. நியூசிலாந்து அணி அடையாளமே ப்ளாக் நீறம் என்ற நிலையில் நியூசிலாந்து அணி அதில் இருந்து வெளியே வந்துள்ளது. காப்பி கலரில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆடையை நியூசிலாந்து அணி அறிமுகம் செய்து உள்ளது.
இந்த தொடரில் நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் , டிம் சவுதி, டென்ட் போல்ட், சாட்னர், கப்தில் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரர்கள் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் இடம்பெறாத நிலையில் பின்ச் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி இந்த தொடரில் விளையாட உள்ளது.