வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரில் புதிய ஜெர்சியில் களம் இறங்கும் நியூசிலாந்து அணி.!
வெஸ்ட் இண்டிஸ் எதிரான தொடரில் புதிய ஜெர்சியில் களம் இறங்கும் நியூசிலாந்து அணி.!
நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக வெஸ்ட் இண்டிஸ் அணி நியூசிலாந்து புறப்பட்டு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில் திவர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளும் இரண்டு தொடருக்கான அணிகளை அறிவித்துவிட்டனர்.
நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் டி-20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் வெஸ்ட் இண்டிஸ் அணியில் கேப்டனாக கிரின் பெல்லார்ட் செயல்பட உள்ளார். இரு அணிகளும் மோதும் முதல் டி-20 போட்டி வருகின்ற நவம்பர் 27 ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் திவிர பயிற்சியில் உள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி-20 தொடரில் புதிய ஜெர்சியில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதற்கான செய்சியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ளது. புதிய ஜெர்சி வழக்கம் போல் நியூசிலாந்து அணியின் ப்ளாக் கேப்ஸ் அடிப்படையில் கருப்பு நிறத்தில் உள்ளது. புதிய வடிவமைப்புடன் இந்த ஜெர்சி உருவக்கப்பட்டுள்ளது.