சிங்கப் பெண்களாக சாதித்த இந்திய வீராங்கனைகள்.. இந்தியாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்..

Update: 2023-09-28 01:24 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தா - ஷஃபாலி வர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 16 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஷஃபாலி வர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். குறிப்பாக இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக தான் இருந்தது. அவர்கள் தங்களுடைய தொடர்பு முயற்சியை கொடுத்துக் கொண்டு வந்தார்கள்.


2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 46 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 9 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜெமீமா ரோட்ரிக்ஸ் 40 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் இலங்கை அணிக்கு 117 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி வீராங்கனைகள் இலங்கை அணிக்கு தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்தனர்.


இளம் வீராங்கனை டைடஸ் சாது வீசிய பந்தில் சஞ்வானி 1 ரன்களிலும், குணரத்னே டக் அவுடாகியும், கேப்டன் சமாரி அட்டப்பட்டு 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக தான் இந்திய மகளிர் அணியின் ஆசிய போட்டியில தங்கம் வெல்ல ஒரு வாய்ப்பாக ஆசிய போட்டியில் முதல் முறையாக களமிறங்கி இந்திய மகளிர் அணி தற்போது தங்கம் வென்று இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News