ஆசிய விளையாட்டுப் போட்டி.. கலக்கும் இந்திய வீராங்கனைகள்..

Update: 2023-09-29 05:21 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டி.. கலக்கும் இந்திய வீராங்கனைகள்..

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கள் துல்லியம் மற்றும் திறமையால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.


சமூக ஊடக எக்ஸ் தளத்தின் பதிவில், பிரதமர் தெரிவித்துள்ளதாவது,  "ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நமது போற்றத்தக்க ஆடவர் அணிக்கு மற்றொரு தங்கம்! சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கள் துல்லியம் மற்றும் திறமையால் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப் படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வுஷு, மகளிர் சண்டா 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி நவோரெமுக்கு பிரதமர்  நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, "பெண்கள் சண்டா 60 கிலோ எடைப்பிரிவில், அர்ப்பணிப்பு மற்றும் திறமைமிக்க நமது ரோஷிபினா தேவி நவோரெம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அசாதாரணமான திறமையையும், சிறந்த செயல்பாட்டிற்கான இடைவிடாத முயற்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஒழுக்கமும், உறுதியும் பாராட்டுக்குரியது. அவருக்கு வாழ்த்துகள்" என்று கூறினார்.

Input & Image courtesy:News


Tags:    

Similar News