இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஏன் இந்த சோகம்.. மனம் திறந்த கே.எல். ராகுல்..
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட பத்து அணிகள் பங்கே இருக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. ஐந்தாவது லீக்கில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியது.
இந்த உலகக் கோப்பை திருவிழாவில் இந்தியாவின் முதல் ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. கட்டாயம் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து ரசிகர்களும் காத்துக் கொண்டு இருந்தார்கள். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை இந்திய அணி துரத்திய போது, ரோகித் சர்மா ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.
இதனால் இந்திய அணி இரண்டு ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அடுத்ததாக விராட் கோலி மற்றும் ராகுல் அணி அபாரமாக விளையாடியது குறிப்பாக நான்காவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அவர்கள் அழைத்துச் சென்றார்கள் இந்த ஆட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு கூட கே எஸ் ராகுல் கிரிக்கெட் மைதானத்தில் சோகமாக அமர்ந்து விட்டார். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது நான் உலகக்கோப்பை தொடரில் இதுவரை சதம் அடித்தது கிடையாது. அந்த ஒரு வருத்தத்தில் தான் இருந்தேன் என்று கூறினார்.
Input & Image courtesy:News