ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த கிரிக்கெட் மட்டை பரிசு
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியில் தொடங்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டு தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்போட்டி முழுவதும் சீனாவில் நடைபெற்றது ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக கொண்டாடப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அதாவது 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 17 பதக்கங்களை வென்று இந்திய அணி வீரர்கள் கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கங்களை விட அதிக பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.
இதனால் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் பதிக்கம் பெற்று சரித்திர சாதனை படைத்த இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவரையும் டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக ஒவ்வொரு நாளும் பதக்கங்களை வெல்லும் வீரர்களை தனது சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர். இந்த நிலையில், இப்போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற அனைத்து வீரர்களும் கிரிக்கெட் பேட்டில் கையெழுத்திட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளித்துள்ளனர்.
Source - Dinamalar & Dailythanthi