இந்திய அணியில் சிறப்பாக தன்னுடைய திறமைகளை சூரியகுமார் யாதவ் வெளிக்காட்டி வருகிறார். குறிப்பாக அவர், இவரை டீமில் வைத்திருக்கும் காரணமே இதுதான். எனவே, சூர்யகுமார் யாதவை இந்தப் போட்டியில் தேர்வு செய்ய சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது. ஆனால், அவரை இந்திய அணியில் களமிறக்கும் முடிவு ரோஹித் சர்மா - டிராவிட் கைகளில் தான் இருக்கிறது. இந்த முக்கியமான முடிவு இவர்கள் இரண்டு பேரும் தான் எடுக்க வேண்டும்.
குறிப்பாக, இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் கடைசி 10 ஓவர்களில் ஸ்கோரை மிக வேகமாக உயர்த்தி விடுவார். இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற் உள்ள அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏற்றது. குறிப்பாக இந்த போட்டியின் போதும் 300 ரன்கள் எடுக்க முடியும் என்று பல்வேறு விமர்சர்கள் கூறினாலும் இந்திய அணி மிகவும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் ஏன் சேர்க்கப்பட்டார் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சூரியகுமார் யாதவ் மீது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Input & Image courtesy: News