இது உலக கோப்பை போட்டியே இல்ல.. மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள்.. விரக்தியில் பாகிஸ்தான்..
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சிறப்பாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றிருக்கிறது. குறிப்பாக இதில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் ஆல் அவுட் ஆகி இந்த இலக்கை இந்தியா கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக கையாண்டு வெற்றியடைய வைத்து இருக்கிறார்.
அத்துடன் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற ஒரு பெருமையையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு எதிர்ப்புகளும் இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது. போட்டியை காண குழுமியிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் ஸ்டேடியம் அதிர்ந்தது. எங்கும் நீல நிற வண்ணமாக காட்சி அளித்தது. சில ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியே வந்த பொழுது கேலி குரல்கள் எழும்பியது. சமூக வலைத்தளங்களில் இந்த ஒரு கருத்துக்கள் மிகவும் வைரலானது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இயக்குனர் விக்கி தன்னுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மைதானம் முழுவதும் ஒரு தலைப்பட்சமாக ரசிகர்கள் கூட்டத்தால் உலக கோகுப்பை போட்டி போன்றே இது இல்லை என்று அவர் கருத்தை தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக இந்திய அணிக்கு முழுமையான ஆதரவு இருந்தனர் இது உங்களின் ஆட்டத்தில் ஏதேனும் தாக்கல் ஏற்படுத்தியதா என்று கேட்டார்.
Input & Image courtesy: News