உலக கோப்பை கிரிக்கெட் தொடர்.. இந்திய அணியின் வரலாற்று சாதனை..

Update: 2023-10-31 01:10 GMT

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளதால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணி தற்போது வரலாறு சாதனையின் படைத்து இருக்கிறது. இதுவரை 6 போட்டிகளில் இந்திய அணி சர்வதேச அணிகளுடன் எதிர் கொண்டு ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்து இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தார்.


இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். குறிப்பாக இந்திய வீரர்களை அருமையான திறன்கள் இந்த ஒரு போட்டியில் வெளிப்படுத்தியது மைதானத்தில் இருந்த அனைத்து இந்திய ரசிகர்களையும் பெரும் உற்சாகத்தில் ஒன்று கூடி இந்திய அணியை பாராட்டினார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News