இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையா.!
இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லையா.!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்திருக்கும் இந்திய அணியும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணியும் அடுத்தாக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாட இருக்கிறது.பிப்ரவரி மாதம் 5ம் தேதியிலிருந்து இந்த இரு அணிகளுக்கிடையேயான தொடர்கள் தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை கூடியது. இந்த சந்திப்பிற்கு பிறகு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த முறை பார்வையாளர்கள் இன்றி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் குரோன்டைனில் இருந்துள்ளனர்.இந்தியாவில் பார்வையாளர்களுடன் தொடரை நடத்தினால் வீரர்கள் மீண்டும் குரோன்டைனில் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கும். எனவே வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதால் இங்கிலாந்து தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் இந்த அதிரடி முடிவால் இந்தி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.