ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: தலைமை தாங்கும் விவேக் சாகர் பிரசாத்!

12வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியானது ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நவம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2021-11-11 11:21 GMT

12வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியானது ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நவம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இந்த தொடரின்போது இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக விவேக் சாகர் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது இந்திய ஆடவர் ஹாக்கி அணி சுமார் 41 ஆண்டுகளுக்கு பின்னர் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதில் வெண்கல பதக்கம் வெல்ல இந்திய அணியில் இடம் பிடித்தவர்களில் விவேக் சாகர் பிரசாத்தும் ஆவார். இதனிடையே இந்திய அணி நவம்பர் 24ம் தேதி முதல் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதன் பின்னர் நவம்பர் 25 கனடா மற்றும் நவம்பர் 27ம் தேதி போலந்து அணியுடன் மோத உள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News