டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் ஓமன் அணிகள் இன்று மோதல்!

7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-19 10:45 GMT

7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மஸ்கட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வங்காளதேசத்துக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் சொதப்பியதால் முதலாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் வீழ்ந்த வங்காளதேச அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும், ஓமன் அணி தொடர்ந்து 2வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த தன்னுடைய முழு பலத்தையும் வெளிபடுத்தும் என்று சொல்லப்படுகிறது. இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதனால் ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/10/19111425/Oman-vs-Bangladesh-Prediction-Who-will-win-todays.vpf

Tags:    

Similar News