ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் 4வது இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டி நடைபெறுகிறது. இதில் உத்தரப் பிரதேச வீராங்கனை அன்னு ராணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
29 வயதான அன்னு ராணி சீனியர் பெண்களுக்கான போட்டியில் பங்கு பெற்றார். முதலில் இவர் 63.82 மீ தூரம் எறிந்தார். அதற்கு அடுத்த வாய்ப்புகளில் 60.10 மீ, 56.60 மீ, 58.13 மீட்டர் எறிந்த அவர், கடைசி இரண்டு வாய்ப்புகளை வேண்டாம் என்று புறக்கணித்தார். முடிவில் அன்னு ராணி முதலிடத்தை உறுதி செய்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பெடரேஷன் கோப்பையில் 63.24 மீ தூரம் எறிந்தது இவரது சாதனையாக பார்க்கப்பட்டது. தற்போது இவரே 63.82 மீ தூரம் எறிந்து தனது சாதனையை தானே கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: Times Of India