முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை பாகிஸ்தான் மண்ணில் வீழத்தியது பாகிஸ்தான் அணி!
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை பாகிஸ்தான் மண்ணில் வீழத்தியது பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தானிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டி காராட்சி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடி தென் ஆப்ரிக்கா அணியில் எல்கரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 220 ரன்கள் மட்டும் அடித்தது.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்கமே சரிவை சந்தித்தது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 33-4 என்ற நிலையில் இருந்தது. பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஆலம் நிலைத்து விளையாடி சதம் வீளாச பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.
ரிஸ்வான் 33 ரன்களும் பாஹிம் அஸ்ரப் 64 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 308-8 ரன்கள் அடித்தது. இந்நிலையில் தென் ஆப்ரிக்காவை விட 88 ரன்கள் முன்னிலை பெற்றது பாகிஸ்தான் அணி. மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 378 ரன்கள் சேர்த்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர் எல்கர் 29 ரன்னில் வெளியேற மார்க்ரம் நிலைத்து விளையாடி அரைசதம் வீளாசினார். பின்னர் வந்த வான் டி டுஸ்ஸன் 64 ரன்கள் அடித்து அவுட் ஆக பின்னர் வந்த வீரர்களில் பவுமா மட்டும் 40 ரன்கள் அடித்தார். தென் ஆப்ரிக்கா அணி பாகிஸ்தான் அணிக்கு 90 ரன்களை இலக்காக நீர்ணயித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை அடித்து முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.