பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கிய மாபெரும் விளையாட்டு போட்டி - 7,000 வீரர்கள் பங்கேற்கும் பிரமாண்டம்
ஏழாயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் தொடங்கியுள்ளது.
இந்தியாவை கவர்ந்த போட்டிகளில் ஒன்றாக தேசிய விளையாட்டு 1924 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல்கள் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு நடைபெறவில்லை. கடைசியாக 35வது தேசிய விளையாட்டு போட்டி 2015 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. இந்த நிலையில் 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திய நகர், சூரத், ராஜ்கோட், பவன் நகர் ஆகிய ஆறு நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
இதில் நீச்சல் போட்டி, தடகளம் குடைப்பந்து கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட 36 விளையாட்டுகளில் இரு பாலர்களும் போட்டிகளில் நடத்தப்படுகின்றது. கொக்கோ, யோகோ ஆகிய அறிமுகமான போட்டிகளும் இடம் பெறுகின்றன. 28 மாநிலங்களில் 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் சர்வீஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7,000 வீரர் உயிராங்கடைகள் போட்டியில் பங்கே இருக்கிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கல் தங்கப்பதக்கம் வென்று சரித்திர படைத்த ஈட்டி எறிதல் வீரர் சோப்ரா, ஒலிம்பிக்கில் இரண்டாம் முறை பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை சிந்து ஒலிம்பிக் மற்றும் உலகப்போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த புனியா ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர்.
அதே நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லியா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் களம் காணுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து 380 வீரர், வீராங்கனைகள் 30 பதக்கங்களின் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: The Hindu