பாராசின் ஓபன் செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

Update: 2022-07-17 07:55 GMT
பாராசின் ஓபன் செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா!

செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), கவுஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரை வெற்று மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 'டிரா' உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.

மேலும், சென்னையில் ஜூலை 28ம் தேதி நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 'பி' அணியில் பிரக்ஞானந்தா இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source,Image Courtesy: Polimer


Tags:    

Similar News