துப்பாக்கிச் சுடும் போட்டி 2வது தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Update: 2022-06-12 13:25 GMT

பிரான்சின் சாட்டௌரேக்ஸ் நகரில் பாரா உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. அதே போன்று நேற்று (ஜூன் 11) நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளம் பாராலிம்பிக் சாம்பியன் அவனி லெகாரா தங்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியிலும் அவனி 458.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

முன்னரே செவ்வாய் அன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அவனி லெகாரா உலக சாதனையுடன் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அதே போன்று நேற்றைய போட்டியில் அவர் மறுபடியும் 2வது முறையாக தங்கம் வென்றுள்ள நிலையில் அவருக்கு பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அவனி லெக்ரா மற்றொரு தங்கத்தை வென்றிருப்பது பெருமைப்படுகிறேன். புதிய உயரங்களை எட்டுவதற்கான உறுதிப்பாடு குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த சாதனைக்கு நான் அவரை வாழ்த்துகிறேன். அவருடைய எதிர்காலம் சிறந்ததாக இருப்பதற்கு வாழ்த்துகிறேன். இவ்வாறு அவரது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News