புரோ கபடி லீக் போட்டி: எந்தெந்த அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி தெரியுமா!

Update: 2022-02-18 08:26 GMT

12 அணிகள் புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை விளையாட வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 22 ஆட்டம் இக்கும். இதில் முதல் 6 இடங்களை பிடிக்கின்ற அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளையுடன் (பிப்ரவரி 19) லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது. இதுவரை தற்போது மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் பாட்னா பைரேட்ஸ் 21 ஆட்டத்தில் 15 வெற்றி பெற்றுள்ளது. ஒரு டை, 5 தோல்வியுடன் 81 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி கடைசி ஆட்டமாக அரியானவுடன் மோத உள்ளது.

மேலும், தபாங் டெல்லி 11 வெற்றி பெற்றுள்ளது. 4 டை, 6 தோல்வியுடன் 70 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உ.பி. யோதா 22 ஆட்டத்தில் 10 வெற்றி பெற்றுள்ளது. 3 டை, 9 தோல்வியுடன் 68 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மற்ற இடத்துக்கு பெங்களூரு புல்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், மும்பை, குஜராத் ஜெய்ன்ட் உள்ளிட்ட அணிகள் களத்தில் உள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News