கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் இன்று இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அமெரிக்கா வீராங்கனை லாரன்லாமுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி படைத்துள்ளார்.
தற்போது இரண்டாவது சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓஹோரியுடன் மோதுகிறார். அதே போன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்று ஆட்டத்தின்போது மலேசியா வீரருடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 22-20, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy: Hindustan Times