பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே ஒரே சதத்தில் பல சாதனைகளை படைத்து அசத்தல்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே ஒரே சதத்தில் பல சாதனைகளை படைத்து அசத்தல்!

Update: 2020-12-27 16:08 GMT

இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது.

பாக்சிங் டே போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் மிக முக்கிய வீரர்களான பர்ன்ஸ் (0), ஸ்டீவ் ஸ்மித் (0), கிரிஸ் கிரீன் (12), டிம் பெய்ன் (13) ஆகியோர் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

இந்திய அணி அசத்தல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக திணறிய போதும் லபுசேன் (48), ஹெட் (38) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 195 ரன்களை எட்டிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு, மாயன்க் அகர்வால் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இளம் வீரர் சுப்மன் கில் மற்றும் சீனியர் வீரர் புஜார் ஆகியோர் நிதானமாக விளையாடி வருவதன் மூலம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி 36 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் புஜாரா (17) விக்கெட்டை இழந்தாலும், தொடர்ந்து நிதானமாக விளையாடிய இளம் வீரர் சுப்மன் கில் 65 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்தடுத்து வந்த ஹனுமா விஹாரி 21 ரன்களிலும், ரிஷப் பண்ட் 29 ரன்களிலும் விக்கெட்டை இழந்தாலும் இதன்பிறகு கூட்டணி சேர்ந்த கேப்டன் ரஹானே – ஜடேஜா ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு பொறுமையாக ரன் சேர்த்து வருவதன் மூலம் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 277 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News