ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 8 விக்கெட்டு இழப்புக்கு 132 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. இதனால் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்போட்டியில் பந்து வீசுவதில் லக்னோ அணி அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டது. ஐபிஎல் விதிப்படி அபராதம் விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போன்று மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் சம்பள கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்ற ஐபிஎல் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: Punjab Kings