ரஞ்சி கோப்பை! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை தொடர் ரத்து!

ரஞ்சி கோப்பை! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை தொடர் ரத்து!

Update: 2021-01-31 10:00 GMT

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்து வந்தது. பல்வேறு மருத்துவ பாதுகாப்புகளுடன் தற்போது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் மற்றும், சையது முஸ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இனி வரும் காலங்களில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டு நடத்துவதாக இருந்த ரஞ்சி கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கிரிக்கெட் தொடரால் ஊதியத்தை இழக்கும் வீரர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்களின் விருப்பப்படி விஜய் ஹசாரே கோப்பை மட்டும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான வினு மன்கட் கோப்பைக்கான ஒருநாள் தொடர், மகளிரில் சீனியர் பிரிவுக்கான ஒருநாள் தொடர் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுசையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் கடைபிடிக்கப்பட்ட பயோ-பபுள் விதிமுறைகளே, அடுத்த மாதம் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கும் கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News