இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகவும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக ரகானே திகழ்ந்து வருகிறார். இருந்தபோதிலும் கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளியிப்படுத்தினார். இதன் காரணமாக அவரை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பினர். இதனிடையே பிசிசிஐ தலைவர் கங்குலி, ரகானே ரஞ்சி டிராபியில் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் எனக்கூறினார். மேலும், தான் சர்வதேச போட்டியில் சில தடுமாற்றம் இருந்தபோதிலும் ரஞ்சி டிராபியில் விளையாடினேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. சவுராஷ்டிரா மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. மும்பை அணி முதலில் விளையாட ஆரம்பித்தது. தொடக்க வீரர் பிரித்வி ஷா ஒரு ரன்னிலும் ஆகார்ஷிட் கோமல் 8 ரன்களிலும் வெளியேறினார். அதற்கு அடுத்து வந்த சச்சின் யாதவ் 19 ரன்களில் ஆட்டத்தை இழந்தார்.
இதன் காரணமாக மும்பை அணி 12.2 ஓவர்களில் 44 ரன்கள் எடுப்பதற்கே 3 விக்கெட்டுகளை பறிக்கொடுக்க நேர்ந்தது. 4வது விக்கெட்டுக்கு ரகானே உடன் சர்பராஸ் கான் இணைந்தார். இந்த ஜோடி அணி சரிவில் இருந்து சற்று மீட்டது. இரண்டு பேரும் அபாரமான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தனர். இதில் சவுராஷ்டிரா அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக விளையாடினர். ரகானே 211 பந்துகளை எதிர்கொண்டு சதம் எடுத்தனர். தற்போது சர்வதேச போட்டியில் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் ரகானேவுக்கு இந்த சதம் சற்று நிம்மதியை அளித்துள்ளது. இதில் மும்பை 73 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்தது.
Source, Image Courtesy: Maalaimalar