இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டிப்ஸ் கொடுத்த ரவிந்திர ஜடேஜா.!

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு டிப்ஸ் கொடுத்த ரவிந்திர ஜடேஜா.!

Update: 2021-01-09 07:27 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரெலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெறு வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் புகோவ்ஸ்கி களமிறங்கினர். அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்கள் மட்டும் எடுத்து முகமது சிராஜ் வீசிய பந்தில் புஜராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பிறகு புகோவ்ஸ்கி மற்றும் லாபுசாக்னே ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி இருவரும் அரை சதம் விளாசினர்.

இதன்பிறகு புகோவ்ஸ்கி 62 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழக்க அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். லாபுசாக்னே 91 ரன்கள் குவித்து ஜடேஜா வீசிய பந்தில் விக்கெட் இழந்து தனது சதத்தை தவறவிட்டார். இதையடுத்து கடந்த இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடிய ஸ்மித் இந்த போட்டியில் நிதானமாக விளையாடி சதம் (131) விளாசினார். 226 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்  16  பவுண்டரிகளுடன்  தனது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் குவித்தது.வழக்கம் போல் இந்த போட்டியிலும் இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

புகோவ்ஸ்கி, ஸ்மித், வேட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோரின்  விக்கெட்டை ஜடேஜா தட்டி தூக்கினார்.  பும்ரா  தனது 25.4வது ஓவரை வீசிய போது ஸ்டீவ் ஸ்மித் பந்தை ஸ்டெம்ப்பிற்கு பின்னால் அடித்து 2 ரன்கள் ஓட ஸ்மித் முயற்சித்தார். அப்போது ரவீந்திர ஜடேஜா பந்தை எடுத்த உடன் ஸ்டெம்ப்பிற்கு குறிவைத்து சரியாக வீசியதால் ஸ்மித் 2வது ரன் பூர்த்தி செய்ய முடியாமல் ரன் அவுட் ஆகினார். ரவீந்திர ஜடேஜா சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் ஒளிபரப்பாளர் ஒருவர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது பேட்ஸ்மேன்கள் எவ்வாறு விளையாட வேண்டுமென்பதை பற்றி கூறுமாறு கேட்டார்.  அதற்கு பதிலளித்த ஜடேஜா “ஆஸ்திரேலியர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்த இலக்கை கண்டு பயப்பட வேண்டாம். நான்கு முதல் ஐந்து செஷன்ஸ் வரை நிதானமாக பேட்டிங் செய்யதாலே போதும்” என்று கூறியிருக்கிறார்.

Similar News