ஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூரு கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கிய போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர் 15) நடைபெறுகிறது.

Update: 2021-09-20 05:35 GMT

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி, கே.கே.ஆர் அணிகள் விளையாடுகின்றன.

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கிய போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர் 15) நடைபெறுகிறது.

இன்று 31வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, கொல்கத்தா நைட் ரைடஸ் அணியுடன் மோதுகிறது. இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகளில் இரண்டு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு, நேர் மோதியுள்ளன. அதில் கேகேஆர் அணி 15 முறையும், ஆர்சிபி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News