ரிஷப் பண்ட் குணமடைய ஒரு ஆண்டு ஆகலாம்: மருத்துவர்கள் அறிக்கை!
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் காயத்தில் இருந்து குணமடைய ஒரு ஆண்டு ஆகலாம்.
இந்தியா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தன்னுடைய சொகுசு காரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஓட்டி சென்றார் டெல்லி டோராடூன் நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளானது. திடீரென்று கட்டுப்பட்டு இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியதன் காரணமாக தடுப்புச் சுவரில் மோதி சில அடி தூரம் சென்று நின்றது. இந்த முகத்தில் ரிஷப் பலத்த காயங்களை சந்தித்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதிய கார் திடீரென்று தீப்பிடித்தது. உடனே ரிஷிப் காரில் இருந்து வெளியேற கார் கண்ணாடியில் உடைத்து அவர் வெளியே வந்தார். முற்றிலுமாக கார் எறிந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அருடைய உடல்நிலை தற்போது சீராகி வருவதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக அவர் டெல்லி செல்ல இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் முழுவதுமாக குணமடைந்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதற்கு ஒரு வருடம் ஆகலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Thanthi