ஒரு நாள் போட்டி: கோலியை நெருங்கும் ரோகித்சர்மா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.;

Update: 2022-02-10 10:56 GMT
ஒரு நாள் போட்டி: கோலியை நெருங்கும் ரோகித்சர்மா!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2வது இடம் பெற்றுள்ளார். அதே போன்று ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3வது இடத்தை பெற்றுள்ளார். அதே சமயம் விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவரை விட 21 ரேங்கிங் புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு பின்னர் ரோகித் சர்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: DNA India 

Tags:    

Similar News