ஆசிய கோப்பை - சச்சினுக்கு கிடைக்காத வாய்ப்பு ரோகித் சர்மாக்கு கிடைக்குமா?
ஆசிய உலக கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கர் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா செய்வாரா?
ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி வருகிற 27ம் தேதி தொடங்குகிறது. மேலும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான இந்திய அணி நாளை மறுநாள் துபாய் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் இந்த ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா அவர்கள் ஒரு புதிய ஒரு சாதனையையும் படைக்க உள்ளார். சச்சின் டெண்டுல்கர் அவர்கள் செய்யாத ஒரு சாதனையை தற்போது ரோகித் சர்மாக்கு நல்ல ஒரு வாய்ப்பாக கிடைத்துள்ளது. உலகக் கோப்பை சாம்பியன் டிராபி அடுத்து பெரிய தொடராக காணப்படுவது இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.
இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியான வண்ணம் நடைபெற்று வருகின்றது. தற்போது 15 வது சீசனை எட்டியுள்ளது. மேலும் இத்தகைய ஆசிய கோப்பை தொடரில் அதிக முறை பங்கேற்ற இந்திய வீரர்கள் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆறுமுறை சமமாக பெற்றுள்ளார்கள். இந்த ஆண்டும் ரோகித்சர்மா இந்த கோப்பை தொடரை பங்கேற்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரோகித் சர்மா வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றால் அதிக முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைப்பார். அதாவது இந்த வருடத்தில் அவர் 7வது முறையாக பங்கேற்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர்களான சிஎஸ்கே வீரர்கள் ஜடேஜா, தோனி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் ஆகியோர் 5 முறை விளையாடி உள்ளார்கள்.
Input & Image courtesy:Mykhel News