ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு.!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு.!

Update: 2020-11-10 07:30 GMT


ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி -20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ளது. அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். 


இந்த மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. டி -20 தொடரில் பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதேபோல் டெஸ்ட் அணியும் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக எந்த அணியிலும் இடம் பெராமல் இருந்தார். இது பெரிய சர்ச்சையாக கிளம்பியது. 


இந்நிலையில் இன்று பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் வீராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய திரும்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் நடைபெற்றும் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டி -20 அணியில் இடம் பெற்ற வருண் சக்கரவரத்தி காயம் காரணமாக விலகியுள்ளார் அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இடம் பெற்றுள்ளார். ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். 

Similar News