தனது உடற்தகுதி குறித்து வெளிப்படையாக அறிவித்த ரோஹித் சர்மா.!

தனது உடற்தகுதி குறித்து வெளிப்படையாக அறிவித்த ரோஹித் சர்மா.!

Update: 2020-11-22 11:13 GMT


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டது. தற்பொழுது ஆஸ்திரேலியாவில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் டி -20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கோலி தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. 


அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, கோஹ்லி இல்லாத இந்திய அணி எப்படி சமாளிக்கும் என்ற விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ரோஹித் சர்மாவை டி.20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் எடுக்காது ஏன் என்ற விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விராட் கோஹ்லி மற்றும் பிசிசிஐ ரோஹித் சர்மாவை வேண்டுமென்றே புறக்கணித்து வருவதாக ரசிகர்கள் பலர் கடும் விமர்ச்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தற்போது இது குறித்து ரோஹித் சர்மாவே மவுனம் கலைத்து வெளிப்படையாக பேசியுள்ளார்.


மற்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிலையில், தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் ரோஹித் சர்மா இது குறித்து பேசுகையில், ““என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு விஷயத்தை மாட்டும் நான் சொல்லியாக வேண்டும். எனது காயம் குறித்து பிசிசிஐ-க்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தெளிவாக சொல்லியிருந்தேன். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

Similar News