இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? BCCI தந்த தீர்வு!
இந்திய கேப்டன் ரோகித் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்று BCCI தந்த தீர்வு என்ன?
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு கேப்டன்சி பொறுப்புகள் அனைத்தும் தற்பொழுது ஹர்திக் பாண்ட்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று BCCI தற்போது முடிவு எடுத்து இருக்கிறது. ஆனால் அதன் பிறகு தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா நிலை என்ன என்பதையும் BCCI தற்போது விளக்கி இருக்கிறது. இந்திய அணியில் கடந்த ஓராண்டு காலமாகவே கேப்டன்சி செய்வதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. 2022 வரை 8 கேப்டன்கள் வரை இந்திய அணியை வழிநடத்திய சூழ்நிலையில் தற்பொழுது T20 தொடர் முழுவதுமாக ஹர்திக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
அனுமானத்தின் அடிப்படையில் இவை வெளியாக இருக்கிறது. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் டி20 முடித்த பிறகு முக்கிய சீனியர் வீரர்கள் குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் இனி டி20 அணிகளில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை மனதில் வைத்து தற்பொழுது இளம் வீரர்களிடம் இந்த கேப்டன்சி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன் பெயரில் ஹர்திக் தலைமையில் இளம் படையை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இனி சீனியர்கள் இந்த டி20 திட்டங்களில் இடம்பெறும் மாட்டார்கள் என்று திட்டவட்டமாக பி.சி.சி.ஐ தெரிவித்து இருக்கிறது. எனினும் பனிச்சுமையால் விலகியுள்ளோம், விரைவில் விளையாடுவோம் என வீரர்கள் முரண்பாடான பதிலை கொடுத்துள்ளனர். அதாவது, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் வரையில் சீனியர் வீரர்கள் டி20 அணிகளில் பெரும்பாலும் சேர்க்கப்படமாட்டார்கள்.
Input & Image courtesy: News