ரோஹித் சர்மா டி-20 மற்றும் ஒரு நாள் போட்டியில் என் இடம்பெறவில்லை - காரணம் உள்ளே.!
ரோஹித் சர்மா டி-20 மற்றும் ஒரு நாள் போட்டியில் என் இடம்பெறவில்லை - காரணம் உள்ளே.!
ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி -20 போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ளது. அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த மூன்று வீதமான தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. டி -20 தொடரில் பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
அதேபோல் டெஸ்ட் அணியும் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக எந்த அணியிலும் இடம் பெராமல் இருந்தார். தற்பொழுது கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதால் ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த கூடியவர் ஆனால் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் கிடைத்ததுள்ளது என் என கேள்வி ஏழுப்பட்டது. இந்நிலையில் அதற்கான காரணத்தை வெளியிட்டது பிசிசிஐ அவர் மூன்று வாரங்க்கு மேல் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிதால் டி -20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இடம் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட பிசிசிஐயின் அறிக்கையில் : ரோஹித்தின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், அதன்படியே அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரோகித் ஷர்மாவிடம் பேசி உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ரோகித் விளையாடுவது உறுதியாகி உள்ளது.
ரோஹித் சர்மா டி-20 மற்றும் ஒரு நாள் போட்டியில் என் இடம்பெறவில்லை காரணம் உள்ளே.!