புள்ளி விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும்: கேப்டன் ரோகித் சர்மா ஆதங்கம்!
வீரர்களுடைய சதத்திற்கு ஏற்றவாறு புள்ளி விவரங்களை சரியாக கொடுக்க வேண்டும் என்று கேப்டன் ஆதங்கம்.
இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரை மூன்று ஒன்று என்ற கணக்கில் முழுமையாக இந்தியா கைப்பற்று இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தரப்பில் ரோகித் சர்மா அவர்கள் 101 ரண்களும், சுமன் 112 ரன்களும் எடுத்து சதம் அடித்தனர். ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா 30 வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் வீரர் ரிக்வி அவர்களின் சாதனையை ரோஹித் சர்மா தற்பொழுது சமன் செய்து இருக்கிறார்.
போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் இது பற்றி கூறுகையில், நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அடித்த முதல் சதம் இதுவாகும் என்று ஒளிபரப்பு நிறுவனம் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 12 போட்டிகள் தான் நான் விளையாடுகிறேன். ஆனால் மூன்று ஆண்டுகளாக இன்று பலமாக சொல்வது மிகவும் அதிக காலம் போல் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஒளிபரப்பு நிறுவனங்கள் தங்களுடைய புள்ளி விவரங்களை சரியாக வெளியிட வேண்டும்.
மக்களுடைய பார்வைக்கு அது சரியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.குறிப்பாக நோய் தொற்று ஏற்பட்டு பிறகு போட்டிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் நான் விளையாடாமல் இருந்த சூழ்நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக நான் மூன்று ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்ய முடியாமல் போனதாகவும், அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே ஒளிபரப்பு நிறுவனங்கள் தங்களுடைய செய்தி வெளியிடும் பொழுது துல்லியமான தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை பரிந்துரை செய்து இருக்கிறார்.
Input & Image courtesy: News