இந்திய கேப்டன் 3 ஆண்டுக்கு முன்பு போட்ட ட்வீட்: திடீரென இப்போ ட்ரெண்ட்?

இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்விட்டர் பதிவு தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

Update: 2022-12-11 12:57 GMT

சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிடும் கருத்துக்களை அவர் நினைத்தால் மட்டும் டெலிட் செய்யும் வகையில் தான் இருக்கிறது. இதன் காரணமாக வருங்காலத்தை நினைத்து அவர்கள் கூறும் கருத்துக்கள், வருங்காலத்தில் நடக்கும் பட்சத்தில் அவை தற்போது ட்ரெண்டாகி வரும். அந்த வகையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆனது. வங்காளத்திற்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகளை மோதி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் இந்திய அணி தோல்வி தழுவியது. இதை அடுத்த கடைசி போட்டியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று இந்திய அணி களம் இறங்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது.


இந்நிலையில் ரோகித் சர்மா கடந்த 2019ம் ஆண்டு போட்ட ட்விட்டர் பதிவு ஒன்று பேசுப் பொருளாகியுள்ளது. அதாவது முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது போட்டியில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என போராடியது. குறிப்பாக கேப்டன் தன்னுடைய கைவிரலில் காயம் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் கடைசிவரை அதிரடி காட்டினார். அரை சதம் விலாசினார் ஒன்பதாவது வீரராக அவர் கலைமிரங்கி இருந்தாலும் 25 8 பந்துகளில் 6 பவுண்டரிகள் 51 ரன்கள் பெற்று இருந்தார். ஒருபுறம் கையில் விரல் வலித்தாலும் இந்திய அணிக்காக விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக போராடினார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.


2019ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ரோகித் சர்மா அவர்கள் போட்ட பதிவில், "நான் எனது அணிக்காக மட்டும் களமிறங்கவில்லை, எனது நாட்டிற்காக களமிறங்குகிறேன்" என ட்வீட் செய்திருந்தார். அதனை காப்பாற்றும் வகையில் தான் தற்போது வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி இருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு பாராட்டி வருகிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News