கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி.!

முன்னெச்சரிக்கையாக நான் செயல்பட்டதால் கொரோனா இருப்பது தெரிய வந்தது. முதலில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று இருப்பது உறுதியானது.

Update: 2021-03-27 07:42 GMT

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இது பற்றி சச்சின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனா தொற்றில் இருந்து என்னை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்களின் ஆலோசனையை கடைப்பிடித்துள்ளேன். முன்னெச்சரிக்கையாக நான் செயல்பட்டதால் கொரோனா இருப்பது தெரிய வந்தது. முதலில் லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதால் பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று இருப்பது உறுதியானது.

ஆனால் எனது வீட்டில் மற்றவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. நான் வீட்டிலேயே தற்போது தனிமைபடுத்தி கொண்டுள்ளேன். மருத்துவர்கள் தனக்கு வேண்டிய வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி நான் கடைப்பிடித்து வருகிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Similar News