அட சூப்பர்... சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு டெண்டுல்கர் பெயர்!

சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானம் நுழைவாயிலுக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

Update: 2023-04-26 01:28 GMT

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கக்கூடிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு பெரிய ஒரு மகத்தான கௌரவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அவரின் சாதனைகளை போற்றும் வகையில் ஆசிரியர்கள் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவாயிலுக்கு அவருடைய பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சூட்டி இருக்கிறது. இந்த ஒரு நிகழ்வு நேற்று அரங்கியது, இந்த நிலையில் வழியாகத்தான் வெளிநாட்டு அணி வீரர்கள் மைதானத்திற்குள் நுழைவார்கள் என்பதும் ஒரு சிறப்பு வாய்ந்த தருணம்.


இந்த அங்கீகாரம் குறித்து டென்டல்கர் கருத்து கூறுகையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெளிநாட்டு அணி செல்லும் பாதை நுழைவாயிலுக்கு எனது பெயர் மற்றும் எனது நண்பர் லாரன்ஸின் பெயரையும் சூட்டி இருப்பது மிகவும் கௌரவமான ஒரு ஒரு தருணம். இதற்காக சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகத்திற்கும் ஆசிரியர் கிரிக்கெட் வாரியத்திற்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சிட்னி மைதானத்திற்கு செல்வதை எதிர்நோக்குகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


டெண்டுல்கர் சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் அடி மூன்று சதம் உட்பட 785 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதில் 2004 ஆம் ஆண்டு ஆட்டம் இழக்காமல் 241 ரன்கள் எடுத்தும் இருக்கிறார், இந்தியாவிற்கு வெளியே தனக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் மைதானம் சிட்னி தான் என்று டெண்டுல்கர் அடிக்கடி கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News