பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய ஆலோசகர்: சானியா மிர்சா நியமனம்!

பெண்கள் பிரீமியர் லீக் போட்டிக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக சானியா மிர்சா நியமனம்.

Update: 2023-02-17 03:20 GMT

பெண்களுக்கான IPL எனப்படும் முதலாவது பெண்கள் பிரீமியம் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டி மார்ச் 4-ம் தேதி தொடங்க 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் ஐந்து அணிகளின் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் 901 கோடிக்கு வாங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சமீபத்தில் நடத்தி ஏலத்தில் ஸ்மிருதி மந்தனா 3.4 கோடிக்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராக ஆச்சரியம் அளிக்கும் வகையில் தற்பொழுது புதிய ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய ஆலோசகராக சானியா மிர்சா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே இம்மாதத்துடன இந்திய சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவை அந்த அணி நிர்வாகம் நேற்று நியமித்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் தலைமை பயிற்சியாளராகவும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் மலோலன் ரங்கராஜன் உதவி பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.  


தற்பொழுது நியமனம் குறித்து சானியா மிர்சா அவர்கள் கூறும் பொழுது, பெண்கள் அணியின் ஆலோசகராக என்னை பணியாற்ற அழைத்த பொழுது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் அணியுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பிரபலமான அணியாக தற்போது திகழ்கிறது. ஐபிஎல் போட்டிகளில் பல ஆண்டுகளாக அதிக ரசிகர்களை கொண்ட அணியாக இது திகழ்கிறது. இது நாட்டின் பெண்களின் விளையாட்டு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் இளம் பெண்களை விளையாடுவாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News