முதல் டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியா அணியை அறிவித்த ஷேன் வாரன்.!

முதல் டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியா அணியை அறிவித்த ஷேன் வாரன்.!

Update: 2020-12-10 13:16 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலேட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி பகல் – இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

போட்டியின் மீது தற்பொழுது எதகர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே போல் இந்த போட்டியில் மட்டும் தான் இந்திய அணியன் கேப்டன் கோலி விளையாடுவார் என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரை இந்திய அணி யும் கைப்பற்றியிருந்த நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன. அதே போல் ஆஸ்திரேலியா அணியும் டெஸ்ட் வீரர்களுக்கு டி-20 தொடரிலேயே ஓய்வு அளித்து டெஸ்ட் தொடருக்கு தயார்படுத்தி வருகின்றது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்க வாய்ப்பிருக்கும் ஆஸ்திரேலிய அணியை வெளியிட்டிருக்கிறார்.

இந்த அணியில் வழக்கமான வீரர்களை இருக்கிறார்கள். புதிதாக டிராவிஸ் ஹெட், ஜோ பர்ன்ஸ், வில் புகோவ்ஸ்கி ஆகிய வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். துவக்க வீரராக களமிறங்கி கொண்டிருந்த டேவிட் வார்னர் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் முதல் போட்டியில் இறங்க வாய்ப்பில்லை. 
ஆஸ்திரேலியா அணியின் உத்தேச 11: டிம் பெயின் ( கேப்டன் / வி.கீ), ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ் , மத்தேயு வேட் / கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபூசாக்னே, நாதன் லியோன், வில் புகோவ்ஸ்கி / மார்கஸ் ஹாரிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

Similar News