வீராட் கோலியை விட ஸ்மித், வில்லியம்சன் தான் பெஸ்ட் - ஆஸ்திரேலியா வீரர் சர்ச்சை கருத்து.!

வீராட் கோலியை விட ஸ்மித், வில்லியம்சன் தான் பெஸ்ட் - ஆஸ்திரேலியா வீரர் சர்ச்சை கருத்து.!

Update: 2020-12-13 13:47 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. 

இந்த முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி நாடு திரும்ப உள்ளார். விராட் கோலியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். பிரசவ காலத்தில் அவருடன் இருப்பதற்காக இந்தியாவுக்கு திரும்புகிறார் விராட் கோலி இதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துவிட்டது.

இந்நிலையில் விராட் கோலி இல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடுவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.


இப்படி இருக்கையில் பல்வேறு தரப்பினர் இது குறித்து பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் இதனை வாய்ப்பாக கருதிக் கொண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் விராட் கோலியை விமர்சனமாக பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “என்னை பொருத்தவரையில் ஸ்டீவன் ஸ்மித் நான் பந்து வீசத் தேவையில்லை. அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி.

கேன் வில்லியம்சன் கடந்த வாரம் இரட்டை சதம் அடித்திருந்தார். அதனையும் பார்த்து நினைத்துக்கொண்டேன் நாம் அங்கு விளையாடவில்லை என்று. இந்த கன நேரத்தை பொறுத்தவரை எனது எதிரணியில் அப்படி எந்த பெரிய பேட்ஸ்மேன் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் போது இப்படி தெரிவித்திருப்பது விராட் கோலி போன்ற ஒரு மாபெரும் வீரரை மட்டம் தட்டும் விதமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Similar News