பாராலிம்பிக்ஸ் வீரர்களுடன் இந்திய பிரதமர் !

Breaking News.;

Update: 2021-09-13 03:30 GMT
பாராலிம்பிக்ஸ் வீரர்களுடன் இந்திய பிரதமர் !

மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில்  163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் இந்தியா சார்பில் 54வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய வீர்ரகள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ந்தனர்.

பாராலிம்பிக்ஸ் வீரர்களுக்கு இந்திய பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்தளித்தார் அப்போது அவர்களுடன் எடுக்கப்பட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், கடின உழைப்பால் நீங்கள் மக்களிடம் அறியபடுபவர்களாக மாறியுள்ளீர்கள். விளையாட்டு துறையில் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்க நீங்கள் ஊக்குவிக்கவேண்டும் எனவும் "நான் உங்களுடன் இருப்பதாகவும்" நம்பிக்கை தெரிவித்தார்.

Source: The Hindu Tamil

Tags:    

Similar News