கோட்டை விட்டது இந்திய அணி.. முன்னாள் கேப்டன் கங்குலி கடும் தாக்கு!

ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி கோட்டை விட்டது என்று முன்னாள் கேப்டன் கங்குலி ஆதங்கப்பட்டு இருக்கிறார்.

Update: 2023-06-10 03:14 GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தற்போது நடைபெற்று இருக்கிறது. இதில் முதல் நாளில் இந்திய அணி பெருமளவில் சொதப்பலை சந்தித்து இருந்தது. குறிப்பாக கேப்டனின் முடிவுகள் அவ்வளவாக திருப்தி தரும் வகையில் அமையவில்லை. இந்தியாவிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று பல்வேறு நபர்களும் கருத்து தெரிவித்து கொண்டு வந்தார்கள். அந்த வகையில் தற்பொழுது இரண்டாம் நாளில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்தது.


இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் முடிவில் 151 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்த இந்திய அணி உமேஷ் யாதவை சேர்த்து அஸ்வினை வெளியே உட்கார வைத்தது. இது ரோகித் சர்மா எடுத்த தவறான முடிவாக பார்க்கப்படுகிறது. அப்போது கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் கேப்டன் கங்குலி, ரோகித் சர்மாவை மறைமுகமாக தாக்கி பேசினார்.


இப்பொழுது இந்த பந்தை பாருங்கள், ஆப் ஸ்பின்னர் இந்த ஆடுகளத்தில் பந்து வீச முடியாது என்று யார் சொன்னார். அற்புதமாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார்கள். லயான் 400 விக்கெட்டுகளுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறார். ஜடேஜா ஒரு இடது கை பேட்ஸ்மேன். இந்த தருணத்தில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனை அவர் வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆடுகளத்தில் பந்து திரும்பவும் செய்து பவுன்சும் ஆனது என கங்குலி குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News