டி காக் தலைமையில் டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்தது தென் ஆப்ரிக்கா அணி.!

டி காக் தலைமையில் டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்தது தென் ஆப்ரிக்கா அணி.!

Update: 2020-12-19 07:48 GMT

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்கனவே சுற்றுபயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி கடைசி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கொரோனா பாதிப்பு காரணமாக தடைசெய்யப்பட்ட நிலையில் இலங்கை அணி தற்பொழுது சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. 


இந்நிலையில் இந்த தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. அனைத்து அணிகளும் தற்பொழுது டெஸ்ட் சாம்பியன் தொடரை எதிர்பார்த்து டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் தான் இலங்கை அணியும் தென் ஆப்ரிக்கா சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி நீர்வாகம் தற்பொழுது லங்கா பிரிமியர் லீக் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் இந்ந தொடருக்கான இலங்கை அணியை ஏறாகனவே இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு புதிதாக டி காக் கேப்டன் பொறுப்பை எற்றுள்ள நிலையில் தென் ஆப்ரிக்கா அணி தற்பொழுது டெஸ்ட் தொடருக்கான அணகயை அறிவித்துள்ளது. 


தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி: குயின்டன் டி கோக் (கேப்டன்), டெம்பா பவுமா, ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு பிளெசிஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், டீன் எல்கர், கேசவ் மகாராஜ், லுங்கி என்ஜிடி, ராஸி வான் டெர் டுசென், சரேல் எர்வி, அன்ரிச் நார்ட்ஜே, க்ளெண்டன் ஸ்டூலர்மன் , கீகன் பீட்டர்சன், கைல் வெர்ரெய்ன்

Similar News