பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவித்தது தென்ஆப்ரிக்கா.!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவித்தது தென்ஆப்ரிக்கா.!

Update: 2021-01-11 06:30 GMT

தென் ஆப்ரிக்கா அணி நீண்ட நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. தென் ஆப்ரிக்கா அணி தற்பொழுது தான் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடியது. இந்த தொடரில் இலங்கை அணியை இரண்டு போட்டிகளிலும் வீழ்த்தி தென் ஆப்ரிக்கா அணி தொடரை வென்ற நிலையில் அடுத்த தொடருக்காக தாயர் ஆகி வருகின்றது.

அதேபோல் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இழந்ததுள்ளது. 
தென் ஆப்ரிக்கா அணி தொடர்ந்து வெற்றிக்களை குவிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணி டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. இல்ஙகை அணிக்கு எதிரான தொடரில் இருந்து பல வீரர்கள் இந்த தொடரிலும் இடம்பிடித்துள்ளனர். குயின்டன் டி கோக் (கேப்டன்), டெம்பா பவுமா, ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு பிளெசிஸ், டீன் எல்கர், காகிசோ ரபாடா, டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், லுங்கி என்ஜிடி, ராஸி வான் டெர் டுசென், அன்ரிச் நார்த்ஜே, வியான் முல்டர், லூத்தோ சிபாம்லா வெர்ரெய்ன், சரேல் எர்வி, கீகன் பீட்டர்சன், தப்ரைஸ் ஷம்ஸி, ஜார்ஜ் லிண்டே, டேரின் டுபாவிலன், ஓட்னியல் பார்ட்மேன்

Similar News